பிரபல நடிகை எமி ஜாக்சன் - நடிகர் எட் வெஸ்ட்விக் ஜோடிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
2010-ல் வெளியான மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எமி ஜாக்சன்.
இதன் பிறகு ஐ, தங்கமகன், தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்த இவர், ஹிந்தி தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் எமி ஜாக்சன், நடிகர் எட் வெஸ்ட்விக்கை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார்.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் நேற்று (ஆகஸ்ட் 25) திருமணம் செய்து கொண்டனர்.
இத்தாலியில் நடைபெற்ற இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் நடக்கவில்லை. கருத்து வேறுபாட்டால் பிரிந்த இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.