மீண்டும் தாயாகும் நடிகை எமி ஜாக்சன்!

எமி ஜாக்சன் - நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் கடந்த ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது.
மீண்டும் தாயாகும் நடிகை எமி ஜாக்சன்!
1 min read

நடிகை எமி ஜாக்சன் தாயாகவுள்ளத் தகவலை தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

2010-ல் வெளியான மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எமி ஜாக்சன்.

இதன் பிறகு ஐ, தங்கமகன், தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்த இவர், ஹிந்தி தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

எமி ஜாக்சன், நடிகர் எட் வெஸ்ட்விக்கை நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஆகஸ்ட் 25 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

இத்தாலியில் நடைபெற்ற இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நடிகை எமி ஜாக்சன் தாயாகவுள்ளத் தகவலைப் புகைப்படங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் நடக்கவில்லை. கருத்து வேறுபாட்டால் பிரிந்த இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் மீண்டும் தாயாகவுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

logo
Kizhakku News
kizhakkunews.in