
அனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சயில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட காட்சிகள் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஜூலை 12 அன்று திருமணம் நடைபெற்றது.
இதில் திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த திருமணத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் தனித்தனியாக தங்களின் குடும்பத்தினருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியது.
முன்னதாக, ஐஸ்வர்யா ராயும் அவரது கணவர் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப்போவதாக தொடர்ந்து வதந்திகள் பரவின.
இந்நிலையில், ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்த ஆவணப் படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வதந்திகளுக்கு மத்தியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களின் மகள் ஆகியோர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.