சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்துள்ள படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.
இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
இப்படம் தீபாவளி (அக்.31) அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக இது அமைந்துள்ளதால் அவரது தோற்றமும் மிரட்டலான நடிப்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஜி.வி. பிரகாஷின் இசை படத்துக்குக் கூடுதல் பலமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
ராணுவ வீரர் குறித்த கதை என்பதால் டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. அதேபோல் மனைவி, குழந்தை என உணர்ச்சிபூர்வமான காட்சிகளும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.