அமரன் படப்பிடிப்பு நிறைவு: அதிகாரபூர்வ அறிவிப்பு

படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமரன் படப்பிடிப்பு நிறைவு
அமரன் படப்பிடிப்பு நிறைவு
1 min read

அமரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார். இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.

கடந்த பிப். 16 அன்று இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in