சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்@RKFI

சிவகார்த்திகேயனின் அமரன்: தீபாவளி வெளியீடு!

இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
Published on

சிவகார்த்திகேயனின் அமரன் படம் அக்டோபர் 31 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.

இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.

கடந்த பிப். 16 அன்று இப்படத்தின் டீஸர் வெளியான நிலையில், மே மாதம் இறுதியில் அமரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் இப்படம் அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in