
கடந்த டிச.12-ல் சென்னையில் தொடங்கிய 22-வது சர்வதேசப் படவிழா நேற்று (டிச.19) நிறைவுபெற்றுள்ளது.
இந்த சர்வதேச பட விழாவின் இறுதியில் அறிவிக்கப்பட்ட விருதுகளில் சிறந்த தமிழ்ப் படமாக அமரன் தேர்வானது. 2-வது சிறந்த தமிழ்ப் பட விருது லப்பர் பந்துக்குக் கிடைத்தது.
சிறந்த நடிகருக்கான பரிசு மகாராஜா படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் சிறந்த நடிகைக்கான பரிசு அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டன. சிறந்த துணை நடிகருக்கான விருது தினேஷுக்கும் (லப்பர் பந்து), சிறந்த துணை நடிகைக்கான விருது துஷாரா விஜயனுக்கும் (வேட்டையன்) வழங்கப்பட்டன.
நடுவர்களின் சிறப்புப் பரிசு ஜமா, தங்கலான், வாழை ஆகிய படங்களுக்குக் கிடைத்தன. சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருதை வேட்டையன் பெற்றது.
சிறந்த ஒளிப்பதிவு (சாய்), சிறந்த இசை (ஜிவி பிரகாஷ்) ஆகிய விருதுகளும் அமரன் படம் வென்றது. சிறந்த ஒலியமைப்பு, கொட்டுக்காளி படத்துக்குக் கிடைத்தது. சிறந்த படத்தொகுப்பு (பிலோமின் ராஜ்), சிறந்த திரைக்கதை (நிதிலன் சாமிநாதன்) விருதுகளை மகாராஜா படம் வென்றது.
வாழை பொன்வேல், ரசவாதி அர்ஜுன்தாஸ் ஆகியோருக்கும் சிறந்த நடிப்புக்கான விருதுகள் வழங்கப்பட்டன.