அமரன் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த ராணுவ வீரர்கள், அப்படத்தை மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளனர்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்துள்ள படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.
இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
இப்படம் தீபாவளி (அக்.31) அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் அக்.23 அன்று வெளியானது.
இந்நிலையில் இப்படம் தில்லியில் நேற்று முக்கிய ராணுவ வீரர்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இந்த சிறப்புக் காட்சியை ராணுவ வீரர்களுடன் இணைந்து சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியும் கண்டு ரசித்துள்ளனர்.
அமரன் படத்தை குடும்பத்துடன் பார்த்த ராணுவ வீரர்கள், அப்படத்தை மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளனர்.