அஜித்
அஜித்

கேஜிஎஃப் 3-ல் அஜித்?: தகவல்

அஜித், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.
Published on

கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கேஜிஎஃப் வெற்றியைத் தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘சலார்’. பெரிய எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து சலார் 2 படத்தில் பணியாற்றி வரும் பிரஷாந்த் நீல், சமீபத்தில் அஜித்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அஜித் 2 படங்களில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒன்று கேஜிஎஃப் படத்தின் மூன்றாவது பாகத்தின் கதை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.

logo
Kizhakku News
kizhakkunews.in