ஐரோப்பியா ஜிடி4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் அஜித் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சந்திராவின் எக்ஸ் பதிவு
“அஜித் குமார் ரேஸிங் என்கிற புதிய அணியைத் தொடங்கியதை பெருமையுடன் அறிவிக்கிறோம். ஃபேபியன் என்பவர் இந்த அணியின் அதிகாரபூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார்.
இந்த அணியின் உரிமையாளர் என்பதை கடந்து, அஜித் இந்த கார் பந்தயத்தில் பங்கேற்பார்.
சர்வதேச அளவிலும், எஃப்ஐஏ சாம்பியன்ஷிப் பந்தயத்திலும் கலந்துகொள்ளும் சில இந்தியர்களில், அஜித்தும் ஒருவர்.
ஐரோப்பியா ஜிடி4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கும்.
ஏற்கெனவே, 2004-ல் நடைபெற்ற ஃபார்முலா ஆசிய பிஎம்டபிள்யூ எஃப்3 சாம்பியன்ஷிப் மற்றும், 2010-ல் நடைபெற்ற ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டிகளில் அஜித் பங்கேற்றார்.
திறமையான இளம் வீரர்களுக்கு ஆதரவு அளிப்பதே எங்கள் நோக்கம் ஆகும்”
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.