தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் கோப்ரா படத்தை இயக்கினேன்: அஜய் ஞானமுத்து

"எனக்கு அந்த கதையைப் படமாக்க விருப்பமில்லை, அந்த கதை எனக்கு பிடிக்கவும் இல்லை".
தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் கோப்ரா படத்தை இயக்கினேன்: அஜய் ஞானமுத்து
அஜய் ஞானமுத்து
1 min read

‘கோப்ரா’ கதையை இயக்கச் சொல்லி அப்படத்தின் தயாரிப்பாளர் தன்னை வற்புறுத்தியதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் டிமான்ட்டி காலனி. கடந்த 2015-ல் வெளியான இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

‘டிமான்ட்டி காலனி 2’ படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளது.

முன்னதாக, இமைக்க நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய படங்களை அஜய் ஞானமுத்து இயக்கினார்.

இந்நிலையில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் புரமோஷன் தொடர்பாக எஸ்எஸ் மியூசிக் யூடியூப் சேனலுக்கு அஜய் ஞானமுத்து பேட்டியளித்துள்ளார். அதில், கோப்ரா படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்ததைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “எனக்கு அந்த கதையைப் படமாக்க விருப்பமில்லை, அந்த கதை எனக்கு பிடிக்கவும் இல்லை” என்றார்.

அஜய் ஞானமுத்து பேசியதாவது

“கோப்ரா படத்தை இயக்கியதற்காக வருத்தப்படவில்லை. ஆனால், அப்போது நான் எடுத்த ஒரு முடிவுக்காக வருத்தப்பட்டேன்.

விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. கோப்ரா படத்துக்காக ஆரம்பத்தில் இரு கதைகளைச் சொன்னேன். ஆனால், அது சரியாக அமையவில்லை.

ஒரு கட்டத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு கதையைச் சொன்னார்.

எனக்கு அந்த கதையைப் படமாக்க விருப்பமில்லை, அந்த கதை எனக்கு பிடிக்கவும் இல்லை. படத்தின் கருவே நன்றாக இல்லை. அதன் காட்சிகள் மற்றும் திரைக்கதையை மாற்றியிருக்கலாம்.

ஆனால், படப்பிடிப்பு தொடங்க அதிக நேரம் இல்லாத காரணத்தால் அதே கதையை இயக்கச் சொல்லி தயாரிப்பாளர் என்னை வற்புறுத்தினார்.

அதைத் தொடர்ந்து எனது உதவி இயக்குநர்களும் என்னை சமாதானப்படுத்தும் வகையில் பேச, கோப்ரா படத்தை இயக்கினேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in