ஐஸ்வர்யா அர்ஜூனை கரம்பிடித்த உமாபதி ராமையா!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஐஸ்வர்யா அர்ஜூனை கரம்பிடித்த உமாபதி ராமையா!
ஐஸ்வர்யா அர்ஜூனை கரம்பிடித்த உமாபதி ராமையா!@aishwaryaarjun

பிரபல நடிகர் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவுக்கும் ஜூன் 10 அன்று திருமணம் நடைபெற்றது.

‘பட்டத்து யானை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்யா அர்ஜூன். இதன் பிறகு 2018-ல் 'சொல்லிவிடவா' என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா, அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இதனிடையே இவருக்கும் நடிகர் அர்ஜூன் பங்குபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் உமாபதிக்கும் காதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று இவர்களின் திருமணம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் இந்த திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in