

உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலர் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி தங்களுடைய வாழ்த்துகளைப் பரிமாறி வருகிறார்கள்.
நடிகைகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள். கொண்டாட்டப் புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
கிரித்தி ஷெட்டி:
நடிகை கிரித்தி ஷெட்டி பல்வேறு புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அன்பால் நிறைந்த மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கட்டும் என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா மோகன்:
நடிகை பிரியங்கா மோகனும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் சிறிய காணொளிகளைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகை கௌரி:
இவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பு செய்து கொண்டாடியிருக்கிறார்.
நடிகை பார்வதி:
கிறிஸ்துமஸைக் கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துகள் என நடிகை பார்வதி பதிவிட்டுள்ளார். இவரும் பல்வேறு புகைப்படங்களை இணைத்து ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.
நடிகை பிரியா பவானிஷங்கர்:
பிரியா பவானிஷங்கர் அண்மைக் காலமாகவே சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையும் சுற்றுலாவில் கொண்டாடியுள்ளதாகத் தெரிகிறது. இவரும் பிரத்யேகமாகப் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகப் பதிவிட்டிருக்கிறார்.
நடிகை மீரா ஜாஸ்மின்
நடிகை மீரா ஜாஸ்மின் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, உணர்வுபூர்வமாகப் பதிவிட்டுள்ளார். இப்பண்டிகையை ஒட்டி தான் ஒலியையும் நம்பிக்கையையும் தேர்வு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் புதிய தொடக்கத்தையும் ஆச்சர்யங்களையும் அதிசயங்களையும் உண்டாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Christmas | Merry Christmas | Christmas Celebration |
படங்கள்: இன்ஸ்டகிராம்