பிரபல கிரிக்கெட் வீரரின் மகனுடன் 2-வது திருமணம்: மனம் திறந்த சம்யுக்தா | Samyuktha Shan |

திருமணம் நடக்கப்போவது உண்மைதான்... அறிவிப்பு விரைவில் வெளியாகும்...
கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த்துடன் நடிகை சம்யுக்தா
கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த்துடன் நடிகை சம்யுக்தா
1 min read

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகனைத் திருமணம் செய்து கொள்ளப்போவது உண்மைதான் என்று நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 4 மூலம் பிரபலமடைந்த மாடல் சம்யுக்தா வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு ஏற்கெனவே கார்த்திக் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், சமீபத்தில் விவகாரத்து பெற்றதாக அறிவித்திருந்தார். அதன் பின் அவ்வப்போது தனது படங்களைச் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் சம்யுக்தா.

இதனிடையே, கடந்த அக்டோபர் 21 அன்று தீபாவளியை முன்னிட்டு பிரபல கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்தின் மகனும் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளரான அனிருத்தா ஸ்ரீகாந்த்துடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் சம்யுக்தா, அனிருத்தா ஸ்ரீகாந்த்தை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில் கலாட்டா யூடியூப் சேனலின் நேர்காணலில் சம்யுக்தா பங்கேற்றார். அப்போது “நீங்கள் கிரிக்கெட் வீரரின் மகனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவுகிறதே” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது உண்மைதான். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.

Summary

Actress Samyuktha has stated that it is true that she is going to marry the son of famous cricketer Srikkanth, Aniruda Srikkanth.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in