பிரபாஸ் பட விழா: ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் | Nidhhi Agerwal |

பாதுகாவலர்கள் உதவியுடன் திணறியபடி காரில் ஏறிய காணொளி இணையத்தில் வைரல்...
நடிகை நிதி அகர்வால் (கோப்புப்படம்)
நடிகை நிதி அகர்வால் (கோப்புப்படம்)https://x.com/AgerwalNidhhi
1 min read

ஹைதராபாத்தில் நடிகை நிதி அகர்வால், ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தி நடிகையான நிதி அகர்வால், தமிழில் ஈஸ்வரன், பூமி, கழகத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பவன் கல்யாண் உடன் நிதி அகர்வால் நடித்த ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்தில் நடித்தார். தற்போது இவர், பிரபாஸ்-உடன் தி ராஜா சாப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடலான 'சஹானா சஹானா' பாடலின் வெளியீட்டு விழா நேற்று (டிச. 17) ஹைதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை நிதி அகர்வால், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரசிகர்களின் வருகையால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாதுகாப்பு தடுப்புகளை மீறியதால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

நிகழ்ச்சி முடிவடைந்து முடிந்து நிதி அகர்வால் கிளம்பியபோது, கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் நிதி அகர்வாலை சூழ்ந்துகொண்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தனது பாதுகாவலர்களின் உதவியுடன் கூட்டத்திலிருந்து விலகி, காருக்குள் ஏறினார். காரில் ஏறிய நிதி அகர்வால் சிறிது நேரம், முகத்தை மூடிய படி அமர்ந்து வேதனை அடைந்தார். இந்தச் சம்பவத்தின் காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து நிதி அகர்வால் தரப்பிலிருந்து கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை,

Summary

A video of actress Nidhhi Agerwal getting caught in a crowd of fans in Hyderabad is going viral on the internet.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in