எதிர்நீச்சல் 2 தொடரில் தான் நடிக்கப்போவதில்லை என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த நடிகை மதுமிதா, இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் எதிர்நீச்சல் 2 தொடரில் தான் நடிக்கப்போவதில்லை என மதுமிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், “சில குறிப்பிட்ட காரணங்களுக்காக எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கவில்லை. இந்த பயணத்தில் என் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும், எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய வாய்ப்புகளை நோக்கிய எனது பயணத்தில் இதே அன்பையும், ஆதரவையும் வழங்குவீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.