

தெலுங்கு இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னைத் தவறான வார்த்தையால் குறிப்பிட்டதாக நடிகை திவ்யபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. அதன் பிறகு தமிழில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, முகேன் ராவுடன் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் லிங்கம் என்ற ஓடிடி தொடரிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தெலுங்கில், இயக்குநர் நரேஷ் குப்பிலியின் அடுத்த படமான கோட் படத்தில் திவ்யபாரதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கும் நடிகை திவ்யபாரதிக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் இயக்குநர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து திவ்யபாரதியும் விலகினார். இதனால் சமூக ஊடகத்தில் இயக்குநர் நரேஷ் குப்பிலி, நடிகை திவ்யபாரதியைத் தொடர்ந்து மறைமுகமாகத் தாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அவரை ‘சிலாகா’ என்கிற வார்த்தையைக் கொண்டு குறிப்பிட்டு, அவரை அவதுறாகப் பேசியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட திவ்யபாரதி, அவரைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
பெண் ஒருவரை ‘சிலகா’ என்றோ வேறு சில வார்த்தைகளைப் பயன்படுத்தியோ அழைப்பது நகைச்சுவை அல்ல. இது ஆழ்ந்து ஊறிப்போயிருக்கும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு. மேலும் இது ஒரு நிகழ்வு அல்ல, இந்த இயக்குநர் இதே போன்ற அணுகுமுறையை படப்பிடிப்பு தளத்தில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அவர் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தி வந்தார். இது அவர் உருவாக்குவதாகச் சொல்லிக்கொள்ளும் கலைக்கே துரோகமாகும். அவரது நடவடிக்கைகள் அப்படத்தின் கதாநாயகனுக்கும் தெரியும். ஆனால் அவர் மௌனம் காத்து வந்தார் என்பது வேதனையளிக்கிறது. பெண்கள் கேலிக்கு இலக்கு ஆகாத பணியிடங்களைத்தான் நான் தேர்வு செய்வேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல, ஒரு கலைஞராகவும் பெண்ணாகவும் எனது நிலைப்பாடு. நான் ஒரே நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் குழுவுடன் பலமுறை பணியாற்றியிருக்கிறேன். தமிழ் சினிமாவில் எனக்கு எந்தச் சண்டையும் எழுந்ததில்லை. இந்த ஒரு இயக்குநர் மட்டும் எல்லையை மீறி மரியாதை அற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் பொதுவெளியில் அவற்றை வெளியிடும்போதும் அதற்கு மறுப்பு தெரிவித்துப் பதிலளிக்க எனக்கும் உரிமை உண்டு. என்னைப் பற்றி யாரேனும் இழிவாகப் பேச நினைத்தால், நான் அவர்களுக்கும் சேர்த்து நல்வாழ்த்துகளை அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Actor Divyabharathi has called out filmmaker Naresh Kuppili over what she described as misogynistic behaviour during the making of the Telugu film 'GOAT'. Sharing her ordeal on social media on Wednesday,