
தங்களின் திருமணம் குறித்து பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.
மலையாளத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் பிரபலமான நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஆகியோர் கடந்த அக்.29 அன்று திருமணம் செய்துகொண்டனர்.
திவ்யா ஸ்ரீதருக்கு இது 2-வது திருமணம். முதல் திருமணத்தில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்து பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ளார் திவ்யா ஸ்ரீதர்.
திவ்யா ஸ்ரீதர் பேசியதாவது:
“நாங்கள் செக்ஸுக்காக மட்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை. என் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும், அவர்களுக்கு ஒரு தந்தை வேண்டும். வாழ்க்கையில் செக்ஸ் என்பது ஒரு பகுதிதான். செக்ஸ் இல்லாமல் வாழ முடியாதா என்ன?
60 வயதானவர் 40 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கருத்து தெரிவிக்கிறார்கள். அவருக்கு 49 வயதும், எனக்கு 40 வயதும் ஆகிறது. இனி எங்களின் வயது குறித்து யார்பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை.
நாங்கள் திருமணம் செய்துகொண்டால் எதிர்மறையான கருத்துகள் எழும் என தெரியும், ஆனால் இந்த அளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்று நினைக்கவில்லை”.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.