இன்னும் சில தினங்களில் சுவாரஸ்யமான அப்டேட் வரும் அது வரை “ஓ போட மறந்துவிடாதீர்கள்” என நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
இயக்குநர் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் இப்படத்தில் மிகவும் பிரபலமான “ஓ போடு” செய்கையை விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “நீங்கள் கொடுத்த அன்புக்கு மிக்க நன்றி” என்றார்.
மேலும் இன்னும் சில தினங்களில் சுவாரஸ்யமான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரின் ரசிகர்கள் “ஜெமினி-2 வெளியாகுமா?”, “ஜெமினி மீண்டும் திரைக்கு வருமா?” என பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வதில் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ள நிலையில் ‘ஜெமினி’ படத்தையும் மீண்டும் திரையில் பார்க்க ஆவலுடன் இருப்பதாக தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் பணியாற்றி வருவதால், அது குறித்த அப்டேட் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 17 அன்று விக்ரம் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏதேனும் ஒரு தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.