ஆஸ்கர் முயற்சி: இயக்குநராகக் களமிறங்கிய சூர்யா மகள் தியா | Diya Suriya | 2D Entertainment |

பாலிவுட் பெண் லைட்வுமன்களின் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் எடுத்துள்ளார்...
ஆஸ்கர் முயற்சி: இயக்குநராகக் களமிறங்கிய சூர்யா மகள் தியா | Diya Suriya | 2D Entertainment |
1 min read

நடிகர் சூர்யாவின் மகள் தியா சூர்யா இயக்குநராக அறிமுகமாகி உள்ள ஆவணப்படம் ஆஸ்கர் போட்டிக்காகத் திரையிடப்படவுள்ளது.

நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து நடத்தி வரும் 2டி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், அவர்களது மகளான தியா சூர்யா ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். ’லீடிங் லைட்’ (Leading Light) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பாலிவுட்டில் உள்ள லைட்வுமன்களின் வாழ்க்கையை தியா படமாக்கியுள்ளார்.

கடந்த 2024 அக்டோபர் 2-ல் இப்படம் வெளியான அறிவிப்பை சூர்யா தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தியா முயன்றுள்ளார். அதனடிப்படையில் ஆஸ்கர் தகுதி ஓட்டத்திற்காக இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் உள்ள ரீஜென்சி திரையரங்கில் நேற்று (செப்.26) முதல் திரையிடப்பட்டு வருகிறது. அக்டோபர் 2 வரை இப்படம் மதியம் 12 மணிக்கு திரையிடப்படும் என 2டி என்டெர்டெய்ன்மென்ட் அறிவித்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in