
நடிகர் சூர்யாவின் மகள் தியா சூர்யா இயக்குநராக அறிமுகமாகி உள்ள ஆவணப்படும் ஆஸ்கர் போட்டிக்காகத் திரையிடப்படவுள்ளது.
நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து நடத்தி வரும் 2டி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், அவர்களது மகளான தியா சூர்யா ஆவணப் படம் ஒன்றை இயக்கியுள்ளார். ’லீடிங் லைட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பாலிவுட்டில் உள்ள லைட்வுமன்களின் வாழ்க்கையைத் தியா படமாக்கியுள்ளார்.
கடந்த 2024 அக்டோபர் 2-ல் இப்படம் வெளியான அறிவிப்பு குறித்து சூர்யா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்படம், உலகளவில் பாராட்டுகளை அள்ளி வருகிறது.
இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தியா முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஆஸ்கர் தகுதி ஓட்டமாக இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் உள்ள ரீஜென்சி திரையரங்கில் நேற்று (செப்.26) முதல் திரையிடப்பட்டு வருகிறது. அக்டோபர் 2 வரை இப்படம் மதியம் 12 மணிக்கு திரையிடப்படுவதாக 2டி என்டெர்டெய்ன்மென்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.