நடிகர் ஸ்ரீ-க்கு என்ன பிரச்னை?: இன்ஸ்டா பதிவுகளால் ரசிகர்கள் அதிர்ச்சி!

இவருடைய நடவடிக்கைகள் இவரைப் பின்பற்றுபவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நடிகர் ஸ்ரீ-க்கு என்ன பிரச்னை?: இன்ஸ்டா பதிவுகளால் ரசிகர்கள் அதிர்ச்சி!
@shri_blueticked
1 min read

நடிகர் ஸ்ரீ இன்ஸ்டகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு வருவது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கனா காணும் தொடர் மூலம் நடிகராக வெளி உலகுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. பிறகு, வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் போன்ற படங்களில் நடித்து ஸ்ரீ கவனம் பெற்றார். தமிழ்த் திரைத் துறையில் சற்று மாறுபட்ட கதைக் களங்களில் நடிக்க ஸ்ரீ எப்போதும் ஒரு நல்ல தேர்வாக இருந்திருக்கிறார். இவர் கடைசியாக நடித்து வெளியான படம் இறுகப்பற்று. இது 2023-ல் வெளியானது.

அண்மைக் காலமாக ஸ்ரீ பற்றிய செய்திகள் எதுவும் இல்லாமல் இருந்தன. இந்த நிலையில் தான் ஸ்ரீ தொடர்புடைய இன்ஸ்டகிராம் பக்கம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ ப்ளூ டிக்ட் என்ற பெயரில் இன்ஸ்டகிராம் கணக்கு இயங்கி வருகிறது. நடிகர் ஸ்ரீ இதில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்திருக்கிறார். கடந்த சில நாள்களாக இவருடையப் பதிவு மடை மாறியிருப்பதை ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவர் ஆள் தோற்றம் மாறியிருந்தாலும், இவருடைய நடவடிக்கைகள் இவரைப் பின்பற்றுபவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இவர் தாய்லாந்தில் இருப்பதாகத் தெரிகிறது. உடல் மெலிந்து காணப்படுகிறார். ஆபாச செய்கைகளை வெளிப்படுத்துகிறார்.

இவர் எதனால் இந்த நிலையை அடைந்தார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இவரை ரசித்த ரசிகர்கள் பலர், திறமைமிக்கவர் என்றெல்லாம் கமெண்ட் செய்து ஆதங்கத்தைக் கொட்டி ஆறுதல் வார்த்தைகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்தக் கணக்கும் இவருடைய அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் கணக்கு தானா என்பது பற்றிய விவரமும் உறுதிபடத் தெரியவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in