நடிகர் சரவணன் மீது மனைவி புகார்: கொலை மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு | Saravanan |

சரவணன் 2-வது மனைவியுடன் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஆதாரம்
நடிகர் சரவணன் மீது மனைவி புகார்: கொலை மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு | Saravanan |
படம் : https://www.instagram.com/actorsaravanan
1 min read

நடிகர் சரவணன் தனது 2-வது மனைவியுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக அவரது முதல் மனைவி சூர்யாஸ்ரீ புகார் அளித்துள்ளார்.

பருத்திவீரன் படம் மூலம் பிரபலமான நடிகர் சரவணன், தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அவரது மனைவியான சூர்யாஸ்ரீ, சென்னை ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது கணவர் சரவணன் என்னை ஏமாற்றி விட்டார். ஆரம்பத்தில் அவருடைய செலவீனங்கள் அனைத்தும் நான் தான் கவனித்துக் கொண்டேன். ஆனால், எனக்குக் குழந்தை இல்லாததால் ஸ்ரீதேவி என்பவரைச் சரவணன் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். நாங்கள் மூவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். தற்போது சரவணனும் ஸ்ரீதேவியும் என்னைத் துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்” என்று கூறினார்.

காவல்துறையில் புகார் மனு கொடுத்துள்ள சூர்யாஸ்ரீ கொலை மிரட்டல் விடுத்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார். தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு சரவணன்தான் காரணம் என்று காவல்துறையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Actor Saravanan | Saravanan Wife Complaint | Death threat complaint | Biggboss Saravanan | Paruthiveeran Saravanan wife complaint

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in