ஆணவக்கொலை என்பது வன்முறையோ, கலவரமோ அல்ல, அது பெற்றோரின் அக்கறைதான் என்று நடிகர் ரஞ்சித் பேசியுள்ளார்.
ரஞ்சித் இயக்கி நடித்த படம் ‘கவுண்டம்பாளையம்’. இப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் பேசியதாவது:
“ஆணவக்கொலை என்பது ஒருவகையான உணர்ச்சிதான். அதற்கான தீர்வை என்னுடைய படத்தில் கூறியிருக்கிறேன். நேரடியாக ஒரு காதல் நடக்கும்போது, அதில் பாதிக்கப்படுபவர்கள் பெற்றோர்கள் தான்.
அவர்களுக்குத் தான் அந்த வலி தெரியும். உங்களின் வாகனம் அல்லது செல்போனை யாராவது திருடிவிட்டால் உடனடியாக சென்று அவரை அடிப்பதில்லையா? அதேபோல தான் இதுவும். தன் வாழ்க்கையே தனது பிள்ளைகள் தான் என்று நினைக்கும் பெற்றோர்களின் கோபமும் ஒருவகை அக்கறை தான்.
ஆணவக்கொலை என்பது வன்முறையோ, கலவரமோ அல்ல, அது பெற்றோரின் அக்கறைதான்” என்றார்.
இந்த கருத்துக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, நாடகக் காதலை எதிர்பதால் என்னை சாதி வெறியன் என்று சொன்னால், ஆமாம் நான் சாதி வெறியன் தான் என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.