விஜயின் முதல் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகள். விஜயின் முதல் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடைபெற்றது.