விவசாயிகளுக்கு இலவச டிராக்டர்கள்: சொன்னதைச் செய்த ராகவா லாரன்ஸ்

“இரண்டு மாதத்திற்கு முன்பு எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அதுதான் இந்த மாற்றத்திற்கான துவக்கம்”.
ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்@offl_Lawrence
1 min read

‘மாற்றம்’ என்ற அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் 10 டிராக்டர்களை இலவசமாக வழங்கியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கஷ்டப்படும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, தொலைக்காட்சி நடிகர் கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரும் இணைந்து செயல்பட உள்ளனர்.

இந்த அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளியை ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மாற்றம் அறக்கட்டளையின் தொடக்க விழாவில், “இரண்டு மாதத்திற்கு முன்பு எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அதுதான் இந்த மாற்றத்திற்கான துவக்கம். எனவே, நான் அதைச் செய்யப்போகிறேன். இதைச் செய்யப்போகிறேன் என சொல்ல மாட்டேன், செய்துவிட்டு சொல்கிறேன்” என பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in