
தெகிடி, மேயாத மான், லிஃப்ட் போன்ற படங்களில் நடித்த பிரதீப் விஜயன் இன்று எதிர்பாராத வகையில் உயிரிழந்தார்.
சென்னையில் வசித்து வந்த பிரதீப் விஜயன், கடந்த இரண்டு நாள்களாக தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் அதனை ஏற்கவில்லை என்றும் தெரிகிறது.
ஏற்கெனவே அவருக்கு மூச்சு திணறல், தலை சுற்றல் போன்ற பிரச்னைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரை இரண்டு நாள்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவரது நண்பர்கள் காவல்துறை உதவியோடு பிரதீபின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தலையில் காயங்களுடன் குளியலறையில் மீட்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவரது மரணத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.