அனுமதி இன்றி படங்கள் ஒளிபரப்பு: நோட்டீஸ் வெளியிட்ட நடிகர் பார்த்திபன் | Parthiban |

‘குடைக்குள் மழை’ படத்தின் உரிமம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றினால்....
அனுமதி இன்றி படங்கள் ஒளிபரப்பு: நோட்டீஸ் வெளியிட்ட நடிகர் பார்த்திபன்
அனுமதி இன்றி படங்கள் ஒளிபரப்பு: நோட்டீஸ் வெளியிட்ட நடிகர் பார்த்திபன்
1 min read

தனது படங்களை அனுமதியின்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கு எதிராக நடிகர் பார்த்திபன் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதிய பாதை படத்தை இயக்கி முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற பார்த்திபன் கோலிவுட்டின் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவர். நடிகராகவும் தனது படத்தில் நடிக்கும் வழக்கம் கொண்ட இவர், பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன், நானும் ரௌடிதான் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனது படங்களை அனுமதி இன்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கு எதிராக அவர் வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பார்த்திபனின் எக்ஸ் தளப் பதிவு

இது தொடர்பான அவரது பதிவில் கூறியிருப்பதாவது:-

வழக்கறிஞர் விஜயன் அவர்களின் நோட்டீஸ் மூலம் இச்செய்தியைத் திரையுலக வர்த்தகத்தினருக்குச் சொல்லவும், அதன் மூலம் சரியான விவரம் பெறுவதே நோக்கம். இந்த 35 வருட கலை வாழ்க்கையில் 15 படங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறேன் வெளியிட்டபின் லாப நஷ்டம் பற்றி கவலைக் கொள்ளாமல் அடுத்ததில் தில்லுடன் இறங்கியும் விடுகிறேன். எந்தப் படத்தை எப்படி யாரிடம் எத்தனை வருட ஒப்பந்தத்தில் கொடுத்துள்ளேன் என்ற விவரங்களை உடனடியாக சேகரித்து சேமிக்க விரும்புகிறேன். அறிவுசார் சொத்துரிமை மற்றும் நகல் பிரதிகளின் உரிமைகள் என்னிடமே உள்ளன. இருப்பினும் என் படங்கள் பல்வேறு தொலைக்காட்சிகளில் உரிமையின்றி கேள்வி கேட்பாரற்று ஒளிபரப்பப்பட்டும், கேள்வி கேட்கப்படும்போது மட்டும் நீக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. உதாரணத்திற்கு குடைக்குள் மழை கே டிவியில் உள்ளது. அதன் ஒளிபரப்பு உரிமம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால் நமது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றினால் காப்புரிமை பிரச்னை ஏற்படுகிறது. இப்படிப் பல குழப்பங்களைச் சரி செய்ய என் படங்களில் எந்தெந்த படங்களின் உரிமம் யாரிடம் உள்ளது என்பதை ஒப்பந்தத்துடன் அவர்கள் ஊர்ஜிதபடுத்த போதிய அவகாசம் வழங்கியும் 15 நாள்களுக்குள் முன்வராத படங்களின் உரிமத்தை நான் விற்க ஏதுவாகும் என்பதால் இவ்வேற்பாடு சம்மந்தப்பட்டவர்கள் ஒத்துழைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இரு தினசரி மட்டுமில்லாமல் சமூக வளைதளங்களிலும் பதிவிடுகிறேன். கண்ணில் பட்டவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் வசமும் ஒப்படைக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Actor Parthiban has issued a notice against the broadcasting of his films on television without permission.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in