என் பெயருக்குப் பின்னால் இருப்பது சாதி பெயர் அல்ல: நடிகை நித்யா விளக்கம்!

“பெரும்பாலானோர் என்னை மலையாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்”.
நித்யா
நித்யா@nithyamenen
1 min read

தனது பெயருக்குப் பின்னால் இருப்பது சாதி பெயர் கிடையாது என நடிகை நித்யா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நித்யா. சமீபத்தில் இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை (திருச்சிற்றம்பலம் படத்துக்காக) வென்றார். இந்நிலையில் இவரது பெயருக்குப் பின்னால் இருப்பது மேனன் என்ற சாதி பெயர் கிடையாது மெனன் தான் என்று தனது பெயர் குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இது குறித்து இந்தியா டுடே பேட்டியில் பேசிய அவர், “என்னுடைய உண்மையான பெயர் என்.எஸ். நித்யா. பெங்களூருவில் ஒருவரின் பெயருக்கு முன்னாள் பெற்றோர்களின் பெயர்களை வைப்பது வழக்கமாக உள்ளது. என் அம்மாவின் பெயர் நளினி. என் அப்பாவின் பெயர் சுகுமார். எனவே என் பெயரை என்.எஸ். நித்யா என்று வைத்துக்கொண்டேன். பெயருக்குப் பின்னால் குடும்பப் பெயர், சாதி பெயரை இணைப்பதில் எங்கள் குடும்பத்தினருக்கு உடன்பாடு இல்லை.

இருப்பினும் கடவுச்சீட்டுக்கு பயன்படும் வகையில் பின்னால் ஒரு பெயரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜோதிடம் பார்த்து மெனன் (Menen) என வைத்தேன். அது மேனன் அல்ல, மெனன்.

மூன்று தலைமுறைகளாக நானும் என் குடும்பத்தினரும் பெங்களூருவில் வசித்து வருகிறோம். பெரும்பாலானோர் என்னை மலையாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளியில் 2-வது மொழியாகக் கன்னடமே படித்தேன். மனதளவில் நான் ஒரு கன்னடப் பெண். படப்பிடிப்பு முடிந்த பிறகு, எங்கிருந்து விமானம் முன்பதிவு செய்ய வேண்டும்? கொச்சியில் இருந்தா? என்று கேட்கிறார்கள். என்னுடைய காரைப் பாருங்கள், அது கர்நாடகத்தில் பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in