
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71,
கிருஷ்ணமூர்த்தி என்கிற இயற்பெயரைக் கொண்ட மதன் பாப், கிடார் கலைஞராகக் கலையுலகில் தன் பயணத்தைத் தொடங்கினார்.
தூர்தர்ஷனின் முதல் கிடார் கலைஞராகப் பணியாற்றத் தொடங்கிய மதன் பாப், தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ளார். இவரிடம் ஏ.ஆர். ரஹ்மான் பணிபுரிந்துள்ளார். மதன் பாப் தன்னுடைய குரு என்று ரஹ்மான் கூறியதாக மேடை நிகழ்ச்சி ஒன்றி கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார். மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தவர் பிறகு பாலசந்தரின் வானமே எல்லை படத்தில் நடிகராக அறிமுகமானார். வானமே இல்லை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவே உனக்காக, ஃப்ரண்ட்ஸ், தெனாலி, ஐயா, தேவர் மகன் என 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். விடாமல் சிரிக்கும் தனி பாணியைக் கொண்டதால் ரசிகர்களிடம் எளிதாகப் புகழ்பெற்றார். இவருக்கு சுசிலா என்கிற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளார்கள்.
சமீபகாலமாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மதன் பாப், உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.