கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் நிச்சயமாக நடிப்பேன்: ஜீவா

"ஒரு படமாக எடுப்பதைவிட மிகப்பெரியத் தொடராக எடுக்க வேண்டும்”.
ஜீவா
ஜீவா

கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் அதில் நடிக்க தயாராக உள்ளதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், கருணாநிதியின் வரலாற்று புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

இந்நிலையில் இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா மற்றும் பாடலாசிரியர் பா.விஜய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் பேசிய ஜீவாவிடம் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் அதில் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

ஜீவா பேசியதாவது:

“கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் நிச்சயமாக அவரது கதாபாத்திரத்தில் நடிப்பேன். சமீபத்தில், தெலுங்கில் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு முதல்வர் பற்றிய கதை. ஆனால், இப்போது கருணாநிதியை பற்றி வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால், அதனை ஒரு படமாக எடுப்பதைவிட மிகப்பெரியத் தொடராக எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in