துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நடிகர் கோவிந்தாவுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரும் சிவசேனா கட்சியின் நிர்வாகியுமான கோவிந்தா, கொல்கத்தாவிற்கு செல்ல இன்று அதிகாலை தயாராகிக் கொண்டிருந்த போது, தான் வைத்திருக்கும் உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராத வகையில் அந்த துப்பாக்கி கீழே விழுந்ததில், அவரது காலில் துப்பாக்கியின் குண்டு பாய்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவிந்தாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது காலில் இருந்து துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டிருக்கிறது என்றும் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் கோவிந்தாவின் மேலாளர் தெரிவித்துள்ளார்.