தனுஷ் வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆவணப் படத்தின் டிரெய்லரில், நானும் ரௌடிதான் படத்தின் 3 விநாடி காட்சிகள் இடம்பெற்றதற்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக..
தனுஷ் வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
1 min read

நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"நயன்தாரா: பியான்ட் தி ஃபேரி டேல்" ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த படத் தயாரிப்பாளர் தனுஷ் ஒப்புதல் தரவில்லை என கடந்த நவ. 16 அன்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும், ஆவணப் படத்தின் டிரெய்லரில், நானும் ரௌடிதான் படத்தின் 3 விநாடி காட்சிகள் இடம்பெற்றதற்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டதாகவும் நயன்தாரா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களின் திருமண ஆவணப் படத்தை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மீது தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் விளக்கமளிக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in