நடிகர் பாலாவுக்கு மீண்டும் திருமணம்!

அம்ருதா சுரேஷை 2010-ல் திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக 2019-ல் அவரை விவாகரத்து செய்தார்.
நடிகர் பாலா
நடிகர் பாலா@actorbala
1 min read

நடிகர் பாலா, இன்று தனது உறவு பெண் கோகிலாவை திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் ‘அன்பு’, ‘வீரம்’, ‘அண்ணாத்த’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகரும் இயக்குநர் சிவாவின் சகோதரருமான பாலா. இவர் பல வருடங்களாக மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர், பின்னணி பாடகி அம்ருதா சுரேஷை 2010-ல் திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக 2019-ல் அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தை இருக்கிறது.

அடுத்ததாக, 2021-ல் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்பவருடன் பாலாவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரையும் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் நடிகர் பாலா, இன்று தனது உறவு பெண் கோகிலாவை திருமணம் செய்துகொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in