ஐஷ்வர்யா ராயுடன் விவாகரத்தா?: வதந்திகளுக்குப் பதிலளித்த அபிஷேக் பச்சன்! | Abhishek Bachchan | Aishwarya Rai |

நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு எங்களுடைய திருமணத் தேதி குறித்து...
Aishwarya Rai, Abhishek Bachchan with daughter Aaradhya
மகள், மனைவியுடன் அபிஷேக் பச்சன் (கோப்புப்படம்)
1 min read

மனைவி ஐஷ்வர்யா ராயை விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியாகி வந்த வதந்திகளுக்கு நடிகர் அபிஷேக் பச்சன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஷ்வர்யா ராய் கடந்த 2007-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உண்டு. கடந்த சில நாள்களாகவே அபிஷேக் பச்சன் மற்றும் ஐஷ்வர்யா ராய் விவாகரத்து செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வதந்திகள் அனைத்துக்கும் அபிஷேக் பச்சன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பீபிங் மூனிடம் பேசிய அபிஷேக் பச்சன் கூறியதாவது:

"வெளியான தகவல்கள் குறித்து எனக்குத் தெரியாது. அதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவையும் இல்லை. நீங்கள் பிரபலமானவராக இருந்தால், உங்களுடைய சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் மக்கள் யூகிக்கச் செய்வார்கள். திருமணம் குறித்து எழுத்தப்பட்டவை எல்லாம் முற்றிலும் தவறானது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் எழுதப்பட்டவை.

நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு எங்களுடைய திருமணத் தேதி குறித்து யூகித்து வந்தார்கள். திருமணத்துக்குப் பிறகு, நாங்கள் எப்போது பிரிகிறோம் என்பதை முடிவு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவருக்கு (ஐஷ்வர்யா ராய்) என்னைப் பற்றிய உண்மைகள் தெரியும். எனக்கு அவரைப் பற்றிய உண்மைகள் தெரியும்" என்றார்.

Summary

Actor Abhishek Bachchan has firmly dismissed rumours surrounding his marriage with Aishwarya Rai, putting an end to ongoing speculation.

Abhishek Bachchan | Aishwarya Rai Bachchan | Aishwarya Rai | Divorce |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in