ஏ.ஆர். முருகதாஸிடம் இருந்து இதைக் கற்றுக்கொண்டேன்: மனம் திறந்த அமீர் கான்

“எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடிய ஒரு தனித்துவமான நபர்”.
ஏ.ஆர். முருகதாஸிடம் இருந்து இதைக் கற்றுக்கொண்டேன்: மனம் திறந்த அமீர் கான்

எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் ஏ.ஆர். முருகதாஸ் என நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘கஜினி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர் கான் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் கான், “ஏ.ஆர். முருகதாஸ் அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்வார்” என பேசியுள்ளார்.

அமீர் கான் பேசியதாவது: “எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு தனித்துவமான நபர் ஏ.ஆர். முருகதாஸ். ஒரு காட்சி குறித்து அவருடைய கருத்தை எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுவார். அது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால், “இது நன்றாக இல்லை” எனக் கூறுவார். மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என அவர் கவலைப்படமாட்டார்.

யாரிடம் பேசுகிறோம் என்றெல்லாம் பார்க்காமல், அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்வார். அதேபோல ஒரு யோசனை அவருக்குப் பிடித்திருந்தால், “சூப்பர் ஹிட் சார்” என்று கூறுவார். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இதுதான். எனவே இந்த ஒரு குணத்தை அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in