60 வயதில் காதலியை அறிமுகம் செய்த ஆமீர் கான்!
ANI

60 வயதில் காதலியை அறிமுகம் செய்த ஆமீர் கான்!

மும்பையில் ஊடகர்களைச் சந்தித்த ஆமிர் கான், தனது காதலி கெளரியை அறிமுகம் செய்து ஆச்சர்யப்படுத்தினார்.
Published on

பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான், இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்த நாளில் மும்பையில் ஊடகர்களைச் சந்தித்த ஆமிர் கான், தனது காதலி கெளரியை அறிமுகம் செய்து ஆச்சர்யப்படுத்தினார்.

ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர், கெளரி ஸ்பிராட். இவருடைய தாய் தமிழர், தந்தை அயர்லாந்தைச் சேர்ந்தவர். பெங்களூருவில் வசிக்கும் கெளரிக்கு ஆறு வயதில் மகன் உண்டு.

கெளரியுடனான காதலைப் பற்றி ஆமிர் கான் கூறுகையில், கெளரியை 25 வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். இப்போது ஒன்றரை வருடங்களாக இருவரும் காதலர்களாக உள்ளோம். எனினும் 60 வயதைக் கடந்த நான், இப்போது திருமணம் செய்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. என் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். என்னுடைய முன்னாள் மனைவிகளுடன் சுமூகமான உறவு உள்ளது என்றார்.

1986-ல் ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார் ஆமிர் கான். 2002 வரை இருவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். இவர்களுக்கு ஐரா கான், ஜுனைத் என்கிற இரு குழந்தைகள் உண்டு. 2005-ல் கிரண் ராவைத் திருமணம் செய்தார் ஆமிர் கான். 2021-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஆசாத் என்கிற மகன் உண்டு.

தாரே ஜமீன் பார் படத்தின் 2-ம் பாகமான சிதாரே ஜமீன் பார் (Sitaare Zameen Par) படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஆமிர் கான்.

logo
Kizhakku News
kizhakkunews.in