பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதியப் படத்தின் பூஜை விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெற்றுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் புதியப் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜை நேற்று (ஆகஸ்ட் 25) விஜயகாந்தின் பிறந்தநாள் தினத்தில் அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.
இப்படத்தில் சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசை - யுவன் சங்கர் ராஜா.
முன்னதாக, சண்முக பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் போன்ற படங்களில் நடித்தார்.