பிரசாந்துக்கு குடும்ப பாங்கான ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று அவரது தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் நடித்த அந்தகன் படம் ஆகஸ்ட் 9 அன்று வெளியானது.
இப்படத்தின் வெற்றி விழாவில், “இனி படத்தின் வேலைகளை நிறுத்திவிட்டு பிரசாந்தின் திருமண வேலையை கவனிக்க வேண்டும்” என்று தியாகராஜன் பேசியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் கலாட்டா யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரசாந்துக்கு எப்படிப்பட்ட பெண்ணை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து தியாகராஜன் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது: “பிரசாந்துக்கு ஒரு பெண் தேடும் வேலையில் இறங்கப் போகிறேன். தீராத மனக்கவலையாகவே இருக்கிறது. அவர் அம்மாவும் தினமும் வருத்தப்படுகிறார். குடும்பப் பாங்கான, நாம் எதிர்பார்க்கும் மாதிரியான ஒரு பெண் அமைவது கஷ்டம். வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால் கஷ்டம். சோசியலைஸ் பண்ணுகிற பெண்ணாக இருந்தால் இன்னும் கஷ்டம். பிரசாந்துக்கு எவ்விதக் கெட்டப் பழக்கமும் கிடையாது. இதையெல்லாம் மீறி அழகான, குடும்பப் பாங்கான பெண் எங்கேயாவது பிறக்காமல் இருந்துவிடப் போகிறார் என்கிற கவலையில் உள்ளேன்.
இதுவரை வந்தது எல்லாம் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர், சோசியலைஸிங், பயணத்தில் ஆர்வம், அது பிடிக்கும், இது பிடிக்கும், படகு விளையாட்டில், நீச்சலில் ஆர்வம். பிரசாந்துக்கு இப்படியொரு மனைவி சரியாக வராது. ஒரு குடும்பப் பெண், பார்ப்பதற்கு லட்சணமாக, அழகாக இருக்கவேண்டும்” என்றார்.