கோட் படத்தில் சினேகாவின் கதாபாத்திரத்துக்கு, முதலில் நயன்தாராவை அணுகியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய தி கோட் படம் செப். 5 அன்று வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் இதுவரை ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
கோட் படத்தில் விஜயின் மனைவியாக சினேகா நடித்திருந்தார். ஆனால், முதலில் இந்த கதாபாத்திரத்துக்கு நயன்தாராவை அணுகியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சாய் வித் சித்ரா பேட்டியில் வெங்கட் பிரபு பேசியதாவது:
“சினேகாவின் கதாபாத்திரத்துக்கு முதலில் நயன்தாரவை அணுகினோம். ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நயன்தாரா எனக்கு போன் செய்து சினேகாவை நீங்கள் தேர்வு செய்ததுதான் சரியான முடிவு, அவரைவிட அந்த கதாபாத்திரத்தில் வேறுயாரும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்றார். அதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது”.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.