எழுத்தாளர் சோ. தர்மனுக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

வாழை படம் தன்னுடைய 'வாழையடி' சிறுகதையுடன் ஒத்துப்போவதாக சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் சோ. தர்மன் குறிப்பிட்டிருந்தார்.
மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்
1 min read

எழுத்தாளர் சோ தர்மன் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை அனைவரும் வாசிக்க வேண்டும் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் வாழை. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வாழை படம் தன்னுடைய 'வாழையடி' சிறுகதையுடன் ஒத்துப்போவதாக சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் சோ. தர்மன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ஒரு பிரச்னையை வடிவமாக்கி, இலக்கியமாக்கி, சிறுகதையாக மாற்றி அதற்கு அடையாளம் கொடுக்கும் வகையில் புத்தகமாக வெளியிட்டு அதன் காப்புரிமையை வைத்திருப்பவருக்கு தான் அந்த உரிமம் செல்லும்” என்று சோ. தர்மன் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து எழுத்தாளர் சோ. தர்மனுக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜின் எக்ஸ் பதிவு:

“வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை. அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மனுக்கு நன்றி”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in