பிரபல இயக்குநர் அட்லியும் அவருடைய மனைவியும் நடிகையுமான ப்ரியா அட்லி ஆகிய இருவரும் ஆடை வணிகம் தொடர்பான ஆன்லைன் ஃபேஷன் தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்கள்.
இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் அட்லி. அவருடைய மனைவி நடிகை ப்ரியா. காதல் திருமணம் செய்த இருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஆடை வணிகம் தொடர்பான இணையத்தளத்தை இருவரும் தொடங்கியுள்ளார்கள். ரெட் நாட் (Red Knot) என்கிற ஆன்லைன் ஃபேஷன் தளம் தொடர்பான விளம்பரங்களை அட்லி, ப்ரியா அட்லி இருவரும் வெளியிட்டுள்ளார்கள்.