பிக் பாஸில் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகை திவ்யா துரைசாமி விளக்கியுள்ளார்.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எதற்கும் துணிந்தவன், ப்ளூ ஸ்டார், வாழை போன்ற படங்களில் நடித்த திவ்யா துரைசாமி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் திவ்யா துரைசாமி கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இது குறித்து பேசிய திவ்யா துரைசாமி, “என்னால் 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருக்க முடியாது. ஏன் ஒரு வாரம் கூட என்னால் இருக்க முடியாது. செலிப்ரேஷன் சுற்று என்று சொல்லி நீக்கிவிட்டால் என்ன செய்வது. அடிக்கடி வீட்டுக்குப் போய் வரலாம் என்பதால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதே போல் வாழை படம் அச்சமயத்தில் வெளியாவாதாக இருந்தது. அப்படத்தில் எனது தோற்றம் வித்தியாசமாக இருந்ததால், என்னை அடையாளப்படுத்தி கொள்ள அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்தேன்” என்றார்.