மலையாளத் திரையுலகில் எழுந்த பாலியல் புகார்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியால் நடிகர் ஜீவாவுக்கும், செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜீவாவிடம் செய்தியாளர் ஒருவர் மலையாளத் திரையுலகில் எழுந்த பாலியல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜீவா ஆரம்பத்தில், “தமிழ் திரையுலகில் இதுபோன்ற பிரச்னைகள் இல்லை” என்று நிதானமாக பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கோபப்பட்ட அவர், “நல்ல விஷயம் செய்ய வந்த இடத்தில் அபசகுணமாக கேள்வி கேட்க வேண்டாம். அறிவு இருக்கா?” என்று கோபமாக பேசினார். இதனால் ஜீவாவுக்கும், செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.