தங்கத்தின் விலை 2-வது நாளாக மீண்டும் உச்சத்தை தொட்டது!

டிரம்பின் நடவடிக்கையால், பாதுகாப்பான முதலீடு என்கிற நோக்கில் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை 2-வது நாளாக மீண்டும் உச்சத்தை தொட்டது!
ANI
1 min read

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.5) சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்றபடி இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது தொடர்ந்துள்ள வர்த்தகப் போர் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக டிரம்பின் இந்த நடவடிக்கையால், பாதுகாப்பான முதலீடு என்கிற நோக்கில் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி எதிர்பார்த்த அளவுக்குக் குறைக்கப்படவில்லை. எனவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த பிப்.3-ம் தேதி சிறிது குறைந்திருந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,810 ஆகவும், சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 62,480 ஆகவும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.

இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்று (பிப்.5) மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று கிராமிற்கு ரூ. 95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,905 ஆக விற்பனையாகிறது. அத்துடன் சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 63,240 ஆக விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in