இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்| GSDP | Tamil Nadu

இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்| GSDP | Tamil Nadu
1 min read

மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி 2024-2025 நிதியாண்டில் 11.19% பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளதை மேற்கொள்காட்டி முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

2024-2025 நிதியாண்டிற்கான இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

இதன்படி, முந்தைய 2023-2024 நிதியாண்டை ஒப்பிடும்போது 2024-2025 நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 11.19% வளர்ச்சியை பதிவுசெய்து, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே இந்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதவில் கூறியதாவது,

`இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திமுக அரசு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா... அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ம் நிதியாண்டில். அப்போது கலைஞர் ஆட்சி. இப்போது கலைஞர் வழி நடக்கும் திமுக ஆட்சி. இரண்டுமே கழக ஆட்சி.

2030-ம் ஆண்டுக்குள் One Trillion Dollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. `இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?’ என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in