கருத்துக் கணிப்பு எதிரொலி: புதிய உச்சத்தில் பங்குச் சந்தை!

பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதாக கணிப்புகள் வந்துள்ளதையடுத்து, அதானி குழுமத்தினுடைய பங்குகள் 16% ஏற்றம் கண்டுள்ளன.
கருத்துக் கணிப்பு எதிரொலி: புதிய உச்சத்தில் பங்குச் சந்தை!
ANI

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தில் வர்த்தமாகி வருகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகளை வெளியிட்டன. இந்தியா டுடே- மை ஆக்சிஸ் இந்தியா, இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் மற்றும் நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா ஆகிய நிறுவனங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றலாம் என்று கணித்துள்ளன.

இந்தக் கருத்துக் கணிப்புகள் பங்குச் சந்தையில் அப்படியே எதிரொலித்துள்ளன. இதன் விளைவாகவே மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் இன்று புதிய உச்சத்தில் வர்த்தமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிகள் உயர்ந்து 75,995 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 600 புள்ளிகள் உயர்ந்து 23,149 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.

பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதாக கணிப்புகள் வந்துள்ளதையடுத்து, அதானி குழுமத்தினுடைய பங்குகள் 16% ஏற்றம் கண்டுள்ளன. பாங்க் ஆஃப் பரோடா 8.59%, பாரத ஸ்டேட் வங்கி 6.36%, சென்ட்ரல் பாங்க் 6.34% ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.

நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி கண்டுள்ளதாக வெளியான தகவலும் பங்குச் சந்தை ஏற்றுத்துக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in