பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பவேஷ் குப்தா
பவேஷ் குப்தாANI

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். பவேஷ் குப்தாவின் ராஜினாமாவை நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் அதே நேரத்தில் இந்த ஆண்டு இறுதி வரை பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி முயற்சிகளுக்கு வழிகாட்டும் ஆலோசகராக அவர் செயல்படுவார் என பேடிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 31 அன்று வணிக நேரம் முடிவடையும் சமயத்தில் அவர் நிறுவனத்தின் சேவைகளில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in