டாடா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா நியமனம்

நோயல் டாடாவைத் தலைவராக நியமிக்க, டாடா அறக்கட்டளை இன்று ஒருமனதாக முடிவு செய்தது.
டாடா அறக்கட்டளைத் தலைவராக
நோயல் டாடா நியமனம்
ANI
1 min read

டாடா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.

நோயல் டாடாவைத் தலைவராக நியமிக்க, டாடா அறக்கட்டளை இன்று ஒருமனதாக முடிவு செய்தது.

ரத்தன் டாடா மறைவைத் தொடர்ந்து, டாடா அறக்கட்டளைக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

67 வயதுடைய நோயல் டாடா, ரத்தன் டாடாவின் சகோதரர். நவல் டாடாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர்தான் நோயல் டாடா. இவர் சசக்ஸ் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.

டாடா அறக்கட்டளை உள்பட டாடா குழுமத்தில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்து வருகிறார் நோயல் டாடா. டாடா குழுமத்தில் வெவ்வேறு நிறுவனங்களில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையில் அறங்காவலராக உள்ளார். டைடன் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்களில் துணைத் தலைவராக உள்ளார். டாடா முதலீட்டு நிறுவனத்தின் தலைவராகவும் நோயல் டாடா உள்ளார்.

தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய டாடா இன்டர்நேனஷலில் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in