ஜிஎஸ்டி வரி விகிதம் சீரமைப்பு: அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பா?

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்- கோப்புப்படம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்- கோப்புப்படம்ANI
1 min read

நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதங்களை சீரமைப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சில அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12%-ல் இருந்து 5% ஆகக் குறைப்பது அல்லது 12% வரியை முற்றிலுமாக நீக்குவது என்ற முன்மொழிவு குறித்த ஆலோசனைகள் நிதி அமைச்சக வட்டாரத்தில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சாதாரண குடிமக்களால் அன்றாட வாழ்க்கையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பெரும்பாலானவை மீது தற்போது 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தினரின் அத்தியாவசிய பயன்பாட்டில் பெரிதும் இடம்பெறும் பொருட்களாக சோப்பு, நெய், தின்பண்டங்கள் இதில் அடங்கும்.

இந்த அத்தியாவசியப் பொருட்களை குறைந்தபட்ச 5% வரி வரம்பிற்குள் மறுவகைப்படுத்துவதை உள்ளடக்கிய பரிசீலனை நிதி அமைச்சகத்திடம் உள்ளது, இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் அவை மலிவானதாக மாறி, அதன் மூலம் நுகர்வோருக்குப் பலன் கிடைக்கும்.

ஒரு வேளை அப்படி நடக்காத பட்சத்தில், 12% வரி வரம்பை அரசாங்கம் முழுவதுமாக நீக்கி, ஏற்கனவே உள்ள குறைந்தபட்ச (5%) மற்றும் அதிக (18% மற்றும் 28%) வரி வரம்பில் பொருட்களை மறு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்ததாக நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டத்தில், இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை கூட்டுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு, அது தொடர்பான அறிவிப்பு வெளியிடுவது அவசியம். இதனால் நடப்பு ஜூலை மாத இறுதியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in